குறைந்தது விலை ! மக்கள் முகத்தில் புன்னுருவல்

317

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2 மாதமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து, நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 587 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை160 ரூபாய் குறைந்து, 28 ஆயிரத்து 696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி, 47 ரூபாய் 80 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 47 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of