‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’.., நூதன முறையில் தங்கம் கடத்தல்

1398

இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் ரகசியமாக தங்கங்களை கடத்தி வருவதாக மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராவுத்தர் கனி என்பவரது மகன் அப்துல் ரகிம் ரியாஸ்(32) என்பவர் ஆசன குழாய் மூலம் மஞ்சள் கலர் களிமண் கலவையில் தங்கத்தை மறைத்து வைத்துள்ளது தெரியவந்தது.இதையடுத்து அவரிடமிருந்து (600 கிராம்) 2 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான தங்கங்களை கைப்பற்றினர். இதே போல் இராமநாதபுரம் மாவட்டம் சின்ன தொண்டியை சேர்ந்த முனிஸ்வரன் மகன் பார்த்திபன்(29 ) என்பவரிடம் சோதனை செய்ததில் அவரும் ஆசன குழாய் மூலம் மஞ்சள் கலர் களிமண் கலவையில் தங்கம் 4 பேகிங் சுற்றப்பட்டு மறைத்து கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

 

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட களிமண் உருக்கியதில் 500 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 16 லட்சத்து 4 ஆயிரம் ஆகும்.

ஒரே நாளில் 2 நபர்களிடம் 29 லட்சம் மதிப்புள்ள தங்கம் கைப்பற்பட்டது குறிப்பிடதக்கது. இவர்களை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of