கோல்டன் குளோப் விருது யார் யாருக்கு ?

669

உலக திரைப்பட துறையில் உயர்ந்த விருதென்றால் ஆஸ்கார் தான். அதற்கு பின் இருக்கும் விருது பட்டியலில் கோல்டன் குளோப் விருது தான் இருக்கிறது. கோல்டன் குளோப் நிகழ்வு நேற்று கலிஃபோர்னியாவில் இந்த விருது நிகழ்வு நடைபெற்றது. இந்த விருது நிகழ்வில் சிறந்த நடிகை, நடிகர்கள், கலைஞர்கள், திரைப்படங்கள், திரைத் தொடர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.

அந்நிகழ்வில் வழங்கப்பட்ட விருதுகள் என்னென்ன? பார்ப்போம்

இதில் சிறந்த திரைப்பட நடிகர்  – ரமி மாலிக் (போஹ்மியன் ரஃப்சோடி)

சிறந்த திரைப்பட நடிகை – க்ளென் க்ளோஸ் , (தி வொய்ஃப்)

சிறந்த திரைப்பட துணை நடிகர்  – மஹர்ஷலா அலி, (கிரீன் புக்)

சிறந்த திரைப்பட துணை நடிகை –  ரெஜினா கிங் , (இஃப் ஃபீல் ஸ்ட்ரீட் குட் டாக்)

சிறந்த திரைப்பட நகைச்சுவை நடிகர்  – கிரிஸ்டியன் பேல், (வைஸ்)

சிறந்த திரைப்பட நகைச்சுவை நடிகை – ஒலிவியா கோல்மன், (தி ஃபேவரட்)

சிறந்த இயக்குனர் – அல்போன்சா காரோன், (ரோமா)

சிறந்த பாடல் –  ‘’ஷால்லோ’’ , (ஏ ஸ்டார் இஸ் பார்ன்)

சிறந்த அனிமேஷன் படம் – ஸ்பைடர் மேன் ; இண்டூ தி ஸ்பைடர் – வெர்ஸ்

சிறந்த திரைக்கதை ஆசிரியர் – பீட்டர் ஃபெரெல்லி , (நிக் வெல்லேலோங்கா – கிரீன் புக்)

சிறந்த வெளிநாட்டு திரைப்படம் – ரோமா

வாழ்நாள் சாதனையாளர் விருது – கரோல் பர்னெட்

சிறந்த தொலைக்காட்சி தொடர் – தி கோமின்ஸ்கை மெத்தேடு, தி அமெரிக்கன்ஸ்

சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகர் – ரிச்சர்ட் மாடன் , பாடிகார்ட்

சிறந்த தொலைக்காட்சி தொடர் நடிகை – சந்த்ரா ஓ, கிள்ளிங் ஈவ்

சிறந்த குறுந்தொடர் நடிகர் – டாரன் கிரைஸ்

சிறந்த குறுந்தொடர் நடிகை – பேட்ரிஸியா ஆர்க்யூட்டி, எஸ்கேப் அட் டேன்மோரா

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of