மனரம்மியமான வாழ்க்கை!

539
மனரம்மியமான-வாழ்க்கை

பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளுக்குக் கணவன், மனைவியிடையே நிலவும் திருப்தியற்ற தன்மையும், தவறான புரிதலுமே காரணம். பிரச்சனையின் நடுவில் மனைவி, தனக்குத் தவறான கணவனை இறைவன் தந்துவிட்டார் என்றும், தனக்குத் தவறான மனைவியை இறைவன் கொடுத்துவிட்டார் எனக் கணவனும் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆனால் இறைவன் ஒருபோதும் தவறு செய்வதில்லை.

அவரவர் குணங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமான வாழ்க்கையை தான் இறைவன் கொடுத்திருக்கிறார். ஆதலால் ஒவ்வொரு பெண்ணும் எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாய் இருக்கவும், பட்டினியாய் இருக்கவும், பரிபூரணம் அடையவும், குறைவுபடவும், வாழ்ந்திருக்கவும், தாழ்ந்திருக்கவும் எந்த நிலையில் இருந்தாலும் மன ரம்மியமாக இருக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்க்கும் மேலாக, சாந்த குணத்தோடு, மனத்திருப்தியோடு வாழ்க்கையை தொடரத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைதான் மன திருப்தியுள்ளதாய் அமையும், இறைவன் நமக்கு என்ன கொடுக்கிறாரோ, என்ன வேலையை கொடுக்கிறாரோ, எப்படி உடுத்துவிக்கிறாரோ அதை அப்படியே மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டால், இறைவன் நம்மை மேன்மையாக உயர்த்தி, ஆசிர்வாதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை பெண்ணே!

ஜாய் ஐசக்

(இனியவளே உனக்காக)