மளிகைக் கடைகளுக்கு ஒரு குட் நியூஸ் – ஆட்சியர் அதிரடி

192

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில், ஞாயிறு, புதன், வெள்ளிக்கிழமைகளில் மளிகை கடைகள் இயங்காது என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் நேற்று முன்தினம் அறிவித்தார்.

இதையடுத்து பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து நாட்களிலும் மளிகைக் கடைகளை திறக்க மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்கள் நலன் கருதி மளிகைக் கடைகள் தினமும் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of