“ஹாப்பி பர்த்டே கூகுள்”

969

What is.. How to… Where to.. Near Me… என்றேல்லாம் நம் பள்ளி பருவங்களில் உள்ள சந்தேகங்களை தேடி அறிந்ததை விட, அதிகமாக தேடி அறிந்தது கூகுளில் தான்.. இன்று நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக விழங்கும் கூகுளின் வயது 20.

தேடி கிடைக்காத விடைகளுக்கு, சிறந்த ஆசிரியராக விளங்கும் கூகுள், இன்று தனது 20வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் ஒரு காணொளியை வடிவமைத்து, அது வைரலாகி வருகிறது. இந்த டுடூலில், 20 ஆண்டு கூகுள் கடந்த வந்த பாதை விளக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற மாணவர்கள் சிறு முதலீட்டில் 1998-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த கூகுள் நிருவனம், இன்று பல லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக வளர்ந்துள்ளது.