அடடே..! கூகுள் CEO சுந்தர்பிச்சை இப்போது இதுக்கும் CEO-வா..!

990

பிரபல தேடுபொறி தளமான கூகுள் உலகளாவிய இணைய சந்தையில் முன்னணி இடத்தில் உள்ளது. தேடுபொறி, சர்வர் தொழில்நுட்பம், மென்பொருள் தயாரிப்பு என பல சேவைகளை கூகுள் அளித்து வருகிறது.

இந்த கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை இருந்து வருகிறார். இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்திற்கும் சுந்தர் பிச்சை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் கூட்டாக இதனை அறிவித்துள்ளனர். ஆல்பாபட் நிறுவனத்தை இதற்கு முன்னதாக லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகிய இருவரும் கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement