“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ?” – கோரிக்கை விடுத்த நடிகை

155

கூகுள், இதற்கு விளம்பரம் தேவையில்லை, ஏறக்குறைய பல கல்லூரி மாணவர்களின் செல்ல நண்பன், நாம் கேட்கும் எதற்கும் தெரியாது என்ற பதிலை கூறாமல், நாம் தேடியதற்கு தன்னால் இயன்ற பதிலை கூறுவது தான் அதன் வழக்கம். இந்நிலையில் கூகுளிடம் ஒரு புதிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார் பாலிவுட் நடிகர் நீனா குப்தா.

1982ம் ஆண்டு வெளியான ‘சாத் சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நீனா குப்தா, அன்று தொடங்கி ஹிந்தி மலையாளம் என்று இரு மொழிகளில் மட்டும் நடித்தாலும் சுமார் 38 ஆண்டுகளாக பாலிவுட் உலகில் நடிகையாக வலம்வருகிறார். தற்போது “சுப் மங்கல் ஜியாடா சவ்தான்” என்ற படத்திலும் 83 என்ற படத்திலும் இவர் நடித்து வருகின்றார்.

neena-twitter

இந்த படத்திற்காக புது வித ஹேர் ஸ்டைல் ஒன்றை வைத்துள்ள நீனா, அழகு நிலையத்தில் தனக்கு சிகையலங்காரம் செய்த்தவருக்கு நன்றி தெரிவித்த ஒரு ட்வீட் போட்டுள்ளார், மேலும் அந்த ட்விட்டர் பதிவில் “கூகுள் இப்போதாவது எனது வயதை குறைத்து பதிவிடலாமே என்று குறிப்பிட்டுள்ளார்”

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of