மும்பை இந்தியன்ஸ்-காக பட்டாசு வெடித்த கூகுள்..!

1490

எப்போதும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் ஐ.பி.எல் தொடர், பெருந்தொற்று காரணமாக, தாமதமாக தொடங்கியது. இந்த முறையும் 8 அணிகள் மோதிய நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு, 156 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயம் செய்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 18.4 ஓவரிலேயே இலக்கை எட்டி, அதிரடியாக வெற்றி பெற்றது.

ஏற்கனவே 4 முறை வெற்றிப் பெற்ற நிலையில், தங்களது 5-வது வெற்றியை நேற்று பதிவு செய்தனர். இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், கூகுள் பட்டாசு வெடித்துள்ளது. அதாவது, கூகுளின் தேடு பொறியில், மும்பை இந்தியன்ஸ் என்று தேடினால், அந்த பக்கம் முழுவதும் பட்டாசு வெடிக்கின்றன.

இதனை அறிந்த பல்வேறு ரசிகர்கள், கூகுளில் மும்பை இந்தியன்ஸ் என தேடி, பட்டாசு வெடிக்கப்பட்ட ஸ்கீரின் ஷாட்டை, இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்..

Advertisement