“எனக்கு இரண்டு…,” சுருட்டை முடியின் நக்கலான கேள்வி! கூகுளின் பதிலால் “பல்பு” வாங்கிய பரிதாபம்..!

704

முன்பெல்லாம் ஒரு தகவல் நமக்கு வேண்டுமென்றால், பல புத்தகங்களை புரட்டியும், மற்றவர்களிடம் இருந்து கேட்டறிந்தும் தான், அவற்றை தெரிந்துக்கொள்ள முடியும். ஆனால் தற்போது கூகுளில் தட்டினால் போதும், மூளை முடுக்குகளில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

இதனால் எந்த விஷயம் தேவையென்றாலும், எல்லோரும் கூகுளிலேயே தேடி வருகின்றனர். இதுபோன்று தனக்கு தேவைப்பட்ட தகவலை ஒருவர் கூகுளிடம் கேட்டுள்ளார். அதற்கு கூகுள் பதிலளித்தது, தற்போது வைரலாக பரவிக்கொண்டு வருகிறது.

ஒருவர் முட்டை ஒன்றை வாங்கியுள்ளார். அதை உடைத்த போது 2 மஞ்சள் கருக்கள் இருந்துள்ளது. இதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த நபர், எதனால் இரு மஞ்சள் கருக்கள் இருந்தது என்று கூகுளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார், இரட்டை குழந்தை பிறக்கவுள்ளது என்று கூகுள் பதில் அளித்துள்ளது. இதற்கு ஷாக்கான அவர், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அப்படியானால் உங்கள் வீட்டில் ஒருவர் இறந்து விடுவார் என்று கூகுள் பதில் அளித்துள்ளது. இதனால் அவரின் முகமே மாறிவிடுகிறது. இதுதொடர்பான வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படுவேகமாக பரவி வருகிறது.