சுந்தர் பிச்சை மீது நம்பிக்கை இழக்கும் உழியர்கள்: அதிர்ச்சியில் கூகுள் நிர்வாகம்

252

கூகுள் நிறுவனம் சமிபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சையின் தலைமையின் கீழ் கூகுள் நிறுவனம் ஈட்டிய சாதனை தங்களுக்கு ஊக்கமளிப்பதாக 78 சதவீத ஊழியர்கள் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இவரின் தலைமையில் கூகுளை முன்னெடுத்துச் செல்ல தயாரா? என்ற கேள்விக்கு 74 சதவீதம் ஊழியர்கள் ஆதரவளித்துள்ளனர்.

ஆனால், இந்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 சதவீதம்  குறைவு என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

சுந்தர் பிச்சை எடுக்கும் முடிவுகள், உத்திகளுக்கு 75 விழுக்காட்டினர் ஆதரவாக உள்ளனர்.ஆதரவு அதிகமாக உள்ள போதும், கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் குறைந்திருப்பது நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.