தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்த நாளை கவுரவிக்கும் கூகுள்

670

புதுடெல்லி: இந்தியாவின் முதன்மை கண் மருத்துவரான கோவிந்தப்பா வெங்கடசாமியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரான கோவிந்தப்பா வெங்கடசாமி விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடமாலபுரத்தில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.

ஒரு நாளைக்குள் 100 கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் திறன் பெற்றவராய் கோவிந்தப்பா வெங்கடசாமி திகழ்ந்தார். இவர் தொடங்கிய அரவிந்த் கண் மருத்துவமனையின் மூலம் 6.8 மில்லியன் கண் அறுவை சிகிச்சையும், 55 மில்லியன் பேர் கண் பார்வை திறனும் பெற்றுள்ளனர்.

இவரது சாதனைகளை பெருமைபடுத்தும் வகையில் மத்திய அரசு 1973-ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்துள்ளது. உலகில் கண் மருத்துவத்திற்கு மிகப்பெரும் பங்காற்றிய கோவிந்தப்பா வெங்கடசாமி (87) கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூலை 6-ந் தேதி மறைந்தார்.