கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேவை அறிமுகம்!

869

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தனது பயன்பாட்டாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி, இணையத்தில் தேடும் பணியை எளிமைப்படுத்திவருகிறது.

அதன் அடிப்படையில் கூகுள் அறிமுகப்படுத்தியதே ‘கூகுள் ரிவர்ஸ் இமேஜிங்’ சேவை. சொற்களை பயன்படுத்தாமல் புகைப்படங்களை வைத்து ஒரு தகவலைத் தேட உதவும் இந்த முறையைக்கொண்டு, இணையத்தில் அந்த புகைப்படம் முதல் முதலில் எப்போது பதிவு செய்யப்பட்டது, எங்கு பதிவு செய்யப்பட்டது ஆகிய தகவல்களை கண்டறிய முடியும்.

இவ்வாறு ஒரு புகைப்படத்தை வைத்து தேடும்போது, அந்த புகைப்படம் எந்தெந்த தளங்களில் பதிவு-செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல் வழங்கப்படுவதால், அது எதனோடு தொடர்புடைய புகைப்படம் என்பது குறித்தும், அதன் உண்மைத்தன்மை குறித்தும் நாம் அறிந்துகொள்ளலாம்.

Advertisement