சொடுக்கு போட்டு கூகுளை அழித்த Thanos! – வைரலாகும் வீடியோ

646

அவென்சர்ஸ் என்ட் கேம் திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியான முதல் நாளில் ரூபாய் 1,400 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த பட வரிசையின் முதல் பாகத்தில் இடம் பெற்ற தனோஸ் எனும் கதாபாத்திரம், தனது இரும்பு கையுறையில் பதிக்கப்பட்டுள்ள ஆறு இன்ஃபினிட்டி கற்களை வைத்து உலகில் உள்ள மக்கள் தொகையை பாதியாக குறைப்பது போல் இறுதிகாட்சி உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இந்த கதாபாத்திரத்தை கௌரவிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் புதிய பக்கம் ஒன்றை வடிவமைத்துள்ளது. இந்த பக்கத்தில், அந்த கதாபாத்திரம் வைத்திக்கும் கையுறையை கிளிக் செய்தவுடன், அந்த பக்கத்தில் உள்ள 50 சதவீத தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of