கவுதம் மேனனுடன் இணைகிறார் துல்கர் சல்மான்.

67
துல்கர் சல்மான், மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழில் நடித்த முதல் படமான ‘ஓ காதல் கண்மனி’ மணிரத்தினம் படத்தில் அவருக்கென பெண் ரசிகரிகளை உருவாக்கிக் கொண்டார். பின் தமிழில் பெரிதும் படம் ஏதும் நடிக்கவில்லை. ஆனால் தமிழ் ரசிகர்கள் இவரது அடுத்தடுத்த மலையாள படங்களை திரையரங்கில் பார்த்து வந்தனர். அதன் பின் அவர் தமிழில் நடிக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் படப்பிடிப்பில் உள்ளது. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்குகிறார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டைலிஷ் இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் – கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இது துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here