அரசு பேருந்துகள் அவலத்தைச் சொன்ன அரசு டிரைவர் பணியிடை நீக்கம்

367
bus-driver

அரசு பேருந்துகள் குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாக கூறி, அரசு பேருந்து ஓட்டுனநர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருவர் விஜயகுமார். இவர் , அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததால் ஓட்டுனர்கள், பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக கூறும் வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, அரசு பேருந்துகள் குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாக கூறி ஓட்டுனர் விஜயகுமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓட்டுனர் விஜயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை விளக்கம் அளித்துள்ளது.