குடை போல் விரிந்த பேருந்தின் மேற்கூரை! வெளியான அதிர்ச்சி வீடியோ!

856

பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து ஒன்றின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று, 20-க்கும் மேற்பட்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது.

அப்போது பலத்தகாற்று வீசியதால் அரசு பேருந்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டனர்.

மேலும், தூக்கி வீசப்பட்ட மேற்கூரை சாலையில் சென்றவர்கள் மீது விழாததால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.