விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை – அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

345

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, வரும் 21 ஆம் தேதி நடைபெற இருந்த அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரும் 21ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போதவாக அனைத்து மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

இந்நிலையில் வேலைநிறுத்தம் தொடர்பாக மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 21 ஆம் தேதி நடைபெற இருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.