ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை-ஜெயக்குமார்

620

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும், அப்படி வரும்பட்சத்தில் மக்களின் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

முன்னாள் மேயர் சிவராஜின் 127வது பிறந்தநாளையொட்டி, சென்னை தங்கசாலையில் உள்ள அவரது திருவுருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன், பெஞ்சமின், சரோஜா, வளர்மதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் குறித்து அரசுக்கு இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். அப்படி வரும்பட்சத்தில், மக்கள் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Advertisement