ஒரே நேரத்தில் பதிவிடப்பட்ட ஆபாசப்படங்கள்! அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்!

910

கேரளாவில் அரசு ஊழியர்களின் வாட்ஸ்-அப் குரூப்பில் பதிவிடப்பட்ட ஆபாச படங்களால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளாவில் அரசு ஊழியர்கள் தங்களுக்கென வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி உள்ளனர். திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாட்ஸ்-அப் குரூப் ஒன்று உருவாக்கி அதில் தங்கள் பணி குறித்த தகவல்களை பரிமாறி வந்தனர்.

மேலும் அரசு ஊழியர்களின் சங்க செயல்பாடுகள், அது தொடர்பான கூட்டங்கள், அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் போன்றவற்றையும் வாட்ஸ்-அப்பில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், வாட்ஸ்-அப் குரூப்பில் ஏராளமான ஆபாச படங்கள் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன.

இதைக்கண்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் புகார் கூறினர். இது குறித்து விசாரணை நடத்தியபோது, சங்க உறுப்பினர் ஒருவரின் செல்போன், தொலைந்து விட்டதாகவும், அந்த செல்போனை எடுத்தவர் அதில் ஆபாச படங்களை பதிவேற்றியதாகவும் கூறி குரூப் அட்மினும் சங்கத் தலைவரும் தெரிவித்தார்.

ஆனால் அவர் ஆபாச படங்களை பதிவேற்றியவரை பாதுகாக்க தவறான தகவலை பதிவிட்டது தெரிய வந்தது. இதையடுத்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு இப்பிரச்சனை கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் வாட்ஸ்-அப் குரூப்பின் அட்மின் பொறுப்பில் இருந்து அவரை நீக்கினர்.