அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட முடிவு

719

கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரும் 4ஆம் தேதி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி வரும் 4ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பது தமிழக அரசின் பணியாளர் ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது எனவும், சரியான காரணம் இருந்தால் மட்டுமே வரும் 4ஆம் தேதி ஊழியர்களுக்கு, அதிகாரிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

முன் அனுமதி இல்லாமல் விடுமுறை எடுப்போரின் ஒருநாள் ஊதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகளை பிடித்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். மேலும், வரும் 4ஆம் தேதிக்கு பணிக்கு வந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை, தலைமைச் செயலகத்தில் உள்ள துறைத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.