அரசு பள்ளி மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக, ஷூ மற்றும் சாக்ஸ் – பள்ளி கல்வித்துறை

428

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வருகின்ற 2020 – 21 கல்வியாண்டில் காலணிகளுக்கு பதிலளாக, ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு, விலையில்லா காலணிகள் கடந்த 2012-13ம் கல்வியாண்டுகளில் இருந்து தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதிலாக, ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என, கடந்த சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

முதல் கட்டமாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 23 லட்சத்து 45 ஆயிரத்து 116 மாணவர்களுக்கு, ஷூ மற்றும் சாக்ஸ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இதற்கு சுமார் 8.82 கோடி ரூபாய் நிதி செலவிடப்பட உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.