காஷ்மீர் இணையதள சேவை தடை: “தனிநபர் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசின் கடமை” – உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

482

தனி நபர் சுதந்திரத்தையும் தனி நபர் பாதுகாப்பையும் உறுதி செய்வது நீதிமன்றம் மற்றும் அரசின் கடமை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், இந்தியா வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

தனி நபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் உறுதி செய்வது நீதிமன்றம் மட்டுமல்லாது அரசின் கடமையும் கூட என கருத்து தெரிவித்தனர்.

மத்திய அரசு காஷ்மீரில் இணையதள சேவை தடையை நீக்க பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இணையத்தின் மூலம் கருத்து தெரிவிப்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 19ன் கீழ் வருகிறது.

எனவே கருத்து தெரிவிப்பது தனிநபரின் உரிமையை சார்ந்தது என தெரிவித்தனர். மேலும் இணைய தள தடை உத்தரவை மக்களுக்கு உடனடியாக தெரிவிக்கவேண்டும்.

காஷ்மீரில் எங்கெல்லாம் இணையதள முடக்கம் தேவையில்லையோ அங்கெல்லாம் உடனடியாக இணையதளா தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.