அரசு ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

221

தமிழக அரசின் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறையின் முதன்மைச் செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, இனி அரசுப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

பெரும்பாலான அரசு அலுவலர்கள் பணிநேரத்தின் போது அடையாள அட்டை அணிவதில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற புகார்களில் சிக்கும் அரசு அலுவலர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அடையாள அட்டை அணிவது தொடர்பாக துறை ரீதியாக, செயலாளர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of