பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை

509

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் விலை உயர்ந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியடைய வைத்து உள்ளது. இந்நிலையில், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறும், கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, ஜூலை மாதத்தில் சரிவை கண்டது என்றும், எனவே சர்வதேச சந்தையை பொருத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மாறும்.

எனவே விலை குறையும் சூழ்நிலை விரைவில் வரலாம் என்றும் அவர் கூறினார். சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது எனவும் ராஜிவ்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of