முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் அபராதம் – ஒடிசா அரசு

284

ஒடிசாவில் பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முக கவசங்களை அணிந்து கொண்டு வாய் மற்றும் மூக்கை மறைக்குமாறு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது. குறைந்தது இரண்டு அடுக்குகளில் உள்ள கைக்குட்டை அல்லது வேறு எந்தத் துணியை கொண்டாவது முகத்தை மறைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 7 மணி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

அதன்படி, கஞ்சாமின் மாவட்ட நிர்வாகம், நகர் புறங்களில் முகக்கவசம் இல்லாமல் வெளியே வந்தால் ஆயிரம் ரூபாயும், கிராம புறங்களில் 500 ரூபாயும் அபாராம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of