தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அறிவுரை

321
diwali

பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. .

  • குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
  • உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்
  • அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்
  • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
  • மேலும் மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றம் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்

என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.