5,200 தொழிற்சாலைகளை திறக்க, உ.பி அரசு முடிவு

942

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தஊரடங்கு உத்தரவு வரும் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்குமாறு பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசை வலியுத்தி வருகிறது. அதே நேரத்தில் ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் தாங்களாகவே வரும் 30-ஆம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் ஊரடங்கு நீட்டிப்பை அறிவிக்கவில்லை. இதனிடையே மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக மாநிலத்தில் சுமார் 5,200 தொழில்நிறுவனங்களை துவக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 905 மாவு ஆலைகள், 419 எண்ணெய் ஆலைகள், 235 பருப்பு ஆலைகள் மற்றும் மருந்து பொருள் தயாரிப்பு ஆலைகள் உள்ளிட்ட ஆலைகளை திறக்க முடிவு செய்துள்ளது.

Advertisement