கவர்மெண்ட் ஆபீஸா.. கட்சி அலுவலகமா… போர்டு எல்லாம் ஓகே…எப்போ சார் திறப்பீங்க ?

698

சினிமாத்துறை மட்டுமின்றி அரசியலையும் செம்மையாக நையாண்டி செய்து வெளிவந்த திரைப்படம் “தமிழ்ப்படம்”.

2010 ஆண்டில் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான அந்த திரைப்படத்தில்,, பால் பாக்கெட் போடும் தொழில் செய்ய தொடங்கி படத்தின் ஹீரோ மிர்ச்சி சிவா பெரும் பணக்காரனாக மாறுவது போல காட்சிகள் இருக்கும்.

“ஒரு சூறாவளி கிளம்பியதே” எனத்தொடங்கும் அந்த பாடலில் ஹீரோவின் பெயரில் சிவா விமான நிலையம்,சிவா ஐ.டி. பார்க்,சிவா ரயில் நிலையம்,சிவா பீச், சிவா பிணக்கிடங்கு, சிவா குடிநீர் வாரியம்,சிவா சிறைச்சாலை,சிவா மின்சார வாரியம் என பல திட்டங்கள் தொடங்கப்படும்…

திரைப்படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும் போது கொஞ்சம் நகைச்சுவையாக இருக்கும்.

தமிழ் பட ஹீரோ மிர்ச்சி சிவா சொந்த பணத்தில் அந்த திட்டங்களை தொடங்குவார். அதில் எல்லாம் அவரது பெயர் மட்டுமே இருக்கும். புகைப்படங்கள் இருக்காது.

ஆனால், தமிழகத்தில் மக்கள் வரிப்பணத்தில் கட்டும் அரசு அலுவலக கட்டிடங்களில் திரைப்படத்தையே மிஞ்சும் வகையில் படம் காட்டி வருகிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் 10 வது மண்டலத்திற்குட்பட்ட வடபழனி,அழகிரி நகரில் இருக்கும் அரசு கட்டிடத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சார்பதிவாளர் அலுவலக பலகை மிர்ச்சி சிவா நடிப்பையே தூக்கி சாப்பிடும் வகையில் உள்ளது.

இந்த சார்ப்பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டி முடித்து ஆண்டுக்கணக்காகிறது.

மின் இணைப்போ, குடிநீர் இணைப்போ, ஏன் கழிப்பிட வசதி கூட இல்லாத கட்டிடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இருப்பது போல விளம்பர பலகை வைத்து யாரை ஏமாற்ற நினைக்கிறார் தி.நகர். எம்.எல்.ஏ சத்யா என கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்.

சார்பதிவாளர் அலுவலக பலகையில் தேவையில்லாமல் முதல்வர்,துணை முதல்வர் படத்தையும் போட்டு அவர்களையும் அசிங்கப்படுத்துகிறார்.

இது என்ன கவர்மெண்ட் ஆபீஸா ? இல்லை கட்சி அலுவலகமா என்று ஆதங்கப்பட்ட அப்பகுதி வாசிகள்…

ஜோக்கர் திரைப்படத்தில் வரும்….

என்னங்க சார் உங்க சட்டம்..என்னங்க சார் உங்க திட்டம்..

கேள்வி கேட்க ..ஆளில்லாம போடுறீங்க கொட்டம்…என்ற பாடலை பாடியபடியே நகர்ந்து சென்றனர்……

சரியான பாட்டு தானே…!?

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of