தொழில்நுட்ப புரட்சியில் அரசுப்பள்ளி

629

தொழில்நுட்ப கருவிகள் கற்றலை எளிமையாக்குகின்றன.அவை மேலும் படிக்கும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் கற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் கல்வியில் தொழிநுட்பத்தை புகுத்தி

மாணவர்களுக்கு கற்றலை எளிமையாக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் புதிய தொழில்நுட்பத்தை குறித்த ஒரு செய்திதொகுப்பைப் பார்க்கலாம்.

தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு அரசு பள்ளிகளிலும் தற்பொழுது தொழில் நுட்ப புரட்சி ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.  பல்வேறு தொண்டு நிருவனங்களின் உதவியோடும் பன்னாட்டு நிருவனங்களின்  உதவியோடும் அரசு பள்ளிகளிளும் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் எல்மோ என்ற ஜப்பான் நாட்டு நிறுவனம் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் எளிதாக பார்த்து கற்கும் வகையிளும் ஆசிரியர்களும் சிரமமின்றி கற்று கொடுக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது visualizer எனும் காட்சிபடுத்தும் கருவி. மாணவர்கள் அறிவியல் கூடங்களில் நுண்ணோக்கி வைத்து சிறு துகள்களையும், பொருட்களையும் பெரிதாக பார்த்து பயன்பெறுவர்.

ஆனால், இப்படி பார்க்கும்போது ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர் தனித்தனியே சொல்லிக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். அதைப் போற்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த visualizer கருவி. இதன் முன்னர் எந்த பொருளை வைத்தாலும் அந்த பொருளை பெரிதுபடுத்து திரையில் காண்பித்துவிடும்.

இதனால் ஒரே நேரத்தி ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே போல கற்றுத் தர முடியும். மாணவர்களும் சிரமமின்றி காட்சியில் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

இது குறித்து கூறும் எல்மோ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் இந்த கருவி செயல்படும் விதத்தினால் மாணவர்களுக்கு எளிமையாக ஆசிரியர்கள் கற்றுத் தர முடியும் என்று கூறுகிறார்.

எல்மோ இந்தியா இது குறித்து கூறிய எல்மோ நிறுவன மூத்த துணை  தலைவர் ஷிஞ்சி அசனோ இது ஆரம்பம் மட்டுமே இது போல இந்தியா முழுவதும் கொண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்தார்.

ஷிஞ்சி அசனோ- துணை தலைவர்  எல்மோ ஜப்பான்,எந்த ஒரு உதவியும் இல்லாமல் புத்தகத்திலும் நோட்டிலும் எழுதி படித்த நாட்கள் கடந்து இப்பொழுது தொழில் நுட்பத்தின் உதவியோடு படிப்பது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், நுண்ணிய வடிவில் கற்றுக் கொள்வதை எளிமையாக்குவதாகவும் கூறுகின்றனர்.

எப்பொழுதும் கல்வி நிகரில்லா வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு செல்கிறது. தொழில்நுடபத்தின் துணையோடு இதே வேகத்தில் செல்லுமானால் தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றே கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

 

 

Advertisement