மாணவர்களின் புத்தக சுமையை குறைத்த அரசுப்பள்ளி..! அசத்தலான திட்டம்..!

344

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பகுதியில் அமைந்துள்ளது அரசுப்பள்ளி ஒன்று. வெறும் 20 மாணவர்களை மட்டும் கொண்டுள்ள அந்த பள்ளியில், சுமை இல்லாத சனிக்கிழமை என்ற புதிய திட்டம் ஒன்றை அப்பள்ளி நிர்வாகம் தொடங்கி வைத்தது.

அந்த திட்டத்தின் படி, மாணவர்கள் சனிக்கிழமை அன்று மட்டும் பள்ளிக்கு புத்தகப்பையை கொண்டுவர வேண்டிய அவசியம் கிடையாது. அன்றைய நாளில், மாணவர்களுக்கு விளையாட்டு, கைவினைப் பொருட்கள் செய்வது, ஓவியப் பயிற்சி போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

இவ்வாறு வாரம் ஒரு நாள் மாணவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்படுவதால், அந்த வாரம் முழுவதும் மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை தருகின்றனர் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, பள்ளிக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர்கள் விவசாயம் செய்கிறார்கள். அங்கு விளையும் காய்கனிகளை பள்ளி மதியஉணவில் பயன்படுத்துவதால், மாணவர்கள் தன்னிறைவு அடைவதைப் பார்க்க முடிவுகிறது எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.