நீட் பயிற்சி வகுப்புக்கு அரசு பள்ளிகளும் கட்டாயம் குறைந்தபட்சம் 5 மாணவர்களை சேர்க்க வேண்டும்

380

நீட் பயிற்சி வகுப்புக்கு ஒவ்வொரு அரசு பள்ளிகளும் கட்டாயம் குறைந்தபட்சம் 5 மாணவர்களை சேர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்கள் தயாராக கூடியவகையில் நீட் பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 5 மாணவர்களை நீட் பயிற்சி வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் நீட் தேர்வுக்கான ஆயிரத்து 400 ரூபாய் கட்டணத்தையும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே செலுத்த வேண்டும் என்றும் வாய்மொழியாக உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் எவரும் பாதிக்காத வண்ணம் சிறப்பு கவனம் செலுத்தி நீட் தேர்வுக்கு விண்ணபிக்க அனைத்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார்களா என்பதை தலைமையாசிரியர்கள் மூலம் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.