மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகள் மூடப்படாது

653

மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகள் மூடப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நெல்லை, குமரி, தேனி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சார்ந்த 322  தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடைபெற்றது.

இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்று ஆணைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், டி.ஆர்.பி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று கூறினார்.

தமிழகத்தில் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடிகள் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகளாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.

 

Advertisement