பிச்சைக்காரராக மாறிய அரசு ஊழியர்

665

மனைவி பிரிந்த சோகத்தில் அரசு ஊழியர் ஒருவர் பிச்சைக்காரராக மாறி உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அதே மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் அவரது மனைவி பிரிந்து சென்று வேறு திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான சிவக்குமார் துயரத்தில் இருந்து மீண்டு வர முடியாமல் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமயாகி ஈரோடு பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்து வந்துள்ளார்.

அவரிடம் சென்று விசாரித்த பின் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் சிவக்குமாரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பின் சிவக்குமார் ராசிபுரத்தில் உள்ள அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

மனைவி விட்டு சென்றதால் மனமுடைந்து அரசு ஊழியர் பிச்சை எடுக்கும்  நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of