விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் – அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

430
teachers

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று அரசு எச்சரித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது.

ஆனால் அரசு தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு அரசுப் பணிகளை பாதிக்கும் என்பதால், அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரித்தார். 

இதுதொடர்பாக மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார். பணிக்கு வராத ஊழியர்களின் பட்டியலை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் திட்டமிட்டபடி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அரசு அலுவலங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.