“ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம்”- மோடிக்கு சரத்பவார் ஆலோசனை..!

364

நாடு முழுவதும் உள்ள மக்களை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், அதனை தடுப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் மோடிக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, கொரோனா வைரசுக்கான போராட்டத்தின்போது, உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கம் ஏற்படும் என்றும், எனவே தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் சரத்பவார் கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்களின் வாழ்க்கை மற்றும் உடல் நலம் ஆகியவற்றை உறுதி செய்து சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of