ரயில்வே மேம்பாலத்தை கட்டி முடிக்க காலம் தாழ்த்தும் அரசு – பாஜகவினர் போராட்டம்

240

புதுச்சேரி, அரும்பார்த்தபுரம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், ஒரு பகுதி மட்டும் கட்டி முடிக்கப்படாமல் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு இன்று பேரணியாக சென்ற பாஜகவினர், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்டவைகளை அரசுக்கு ஒப்படைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசை கண்டித்தும், பாலத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பியதால் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of