தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட அரசு வாகனங்கள் ? பா.ஜ.க வேட்பாளர் மீது புகார்

381

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி நாடாளுமன்ற தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

சோனியாவை எதிர்த்து அவரது தீவிர ஆதரவாளராக இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு தாவிய தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் வி.சி.சுக்லா தேர்தல் கமிஷனில் எழுத்து மூலமாக பா.ஜனதா வேட்பாளர் மீது புகார் அளித்து உள்ளார்.

அதில் அவர், ‘பாரதீய ஜனதா வேட்பாளர் அரசு வாகனங்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறார். உசார் என்ற இடத்தில் நேற்று அதை போலீசார் கைப்பற்றியும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் அவர் கட்சி மாறிய நிலையில் எம்.எல்.சி. அதிகாரத்தை தேர்தலில் பயன்படுத்தி வருகிறார். எனவே முறையான சுதந்திரமான தேர்தல் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of