மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை – சென்னை உயர் நீதிமன்றம்

384
chennai-high-court

தனியார் பாலின் தரத்தை, பால் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் மக்களுக்கு தரமான பாலை வழங்குவது அரசின் கடமை என்று தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனங்களின் பால் தரமற்று இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், பால் வளத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுக்கள், தனியார் பாலின் தரத்தை, ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாலின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பால்வளத் துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினர் ஆய்வு செய்வதை தடுக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனியார் பாலின் தரத்தை, பால் வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கிய நீதிபதி, தரமான பாலை மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here