வெடிவிபத்து – செய்தியாளரிடம் கதறி அழுத ஆளுநர்

996

தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பேரழிவை பார்த்தது இல்லை என கூறிய பெய்ரூட் ஆளுநர், பேட்டி கொடுக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

பெய்ரூட் துறைமுக வெடிவிபத்து குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பெய்ரூட் ஆளுனர் க்ரீஸ் வெயில், பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

தன்னுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு பேரழிவை பார்த்தது இல்லை என்றும், ஜப்பானில் வெடித்த ஹிரோஷிமா, நாகசாகியை நினைவு படுத்துவதாகவும் கூறினார். கட்டுப்படுத்த முடியாமல் ஆளுநர் கண்ணீர் சிந்தும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.