தனிப்பட்ட நபர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுனர் கூறவில்லை

637

தனிப்பட்ட நபர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுனர் கூறவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமாறப்பட்டுள்ளதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆளுனர் மாளிகை, கல்வியாளர்கள் தெரிவித்த தகவலின் பேரிலேயே ஆளுநர் கவலை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2018ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 9 துணைவேந்தர்களும் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட நபர்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஆளுநர் மாளிகை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of