தமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனங்களில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக ஆளுநர் குற்றச்சாட்டு

907

சென்னை தியாகராயநகரில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு இன்று காலை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

தமிழகத்தில் பல கோடி ரூபாய் பரிமாற்றத்தால் துணைவேந்தர் பதவி நியமனம் நடைபெற்றதாக எனக்கு தெரிய வந்தது. இதுவரை கோடி கோடியாக பணம் பெற்று விட்டுத்தான் தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் நியமிக்கப்பட்டுள்ளன. பல்கலைகழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததை கண்டு வருத்தமடைந்தேன். இதனை மாற்ற வேண்டும் என முடிவு செய்து என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தேன்.

தகுதி அடிப்படையில் மட்டும் தான் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும். இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி நியமன அடிப்படையில் நியமித்துள்ளேன். மேலும் பணத்துக்கு பதவி வழங்குவதை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன் எனக் கூறினார். இந்நிலையில் துணைவேந்தர் நியமனம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement