ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உதகை வருகை

247

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உதகைக்கு வியாழக்கிழமை வருகிறார்.
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கும் 123-ஆவது மலர்க் கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உதகைக்கு வியாழக்கிழமை வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வியாழக்கிழமை பிற்பகல் 3.20 மணிக்கு கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் உதகைக்கு வருகிறார். முன்னதாக கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆளுநர் உதகைக்கு வர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது உதகையில் பகல் நேரங்களில் மழை பெய்து வருவதாலும், மழையைத் தொடர்ந்து மேகமூட்டமாக இருப்பதாலும் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 123-ஆவது மலர்க் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.

மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள கண்காட்சி நிறைவு விழாவிலும் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் பரிசுகளை வழங்குகிறார். அதன்பின் மே 22-ஆம் தேதி உதகையில் இருந்து சென்னை திரும்புகிறார்.

உதகையில் ஆளுநர் தங்குமிடமான ராஜ்பவன் மாளிகை, அரசினர் தாவரவியல் பூங்கா வளாகத்துக்குள் அமைந்துள்ளதால், ராஜ்பவன் மாளிகையில் மட்டுமின்றி தாவரவியல் பூங்கா வளாகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of