பாரசிட்டமால் மாத்திரை பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

988

பாரசிட்டமால் மாத்திரைகள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மதுரை உயர்நீதிமன்றக்கிளையில்,  ஜோயல் சுகுமார் என்பவரால் பொதுநலவழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில்,  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் சாதாரணகாய்ச்சலுக்காக மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் பாரசிட்டமால் மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டது.

இதனால், பாரசிட்டமால் மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை தேவையில்லை என உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி வழங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதனால், பாரசிட்டமால் மாத்திரைகள் கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கை முடித்து வைப்பதாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of