அரசு பஸ் மோதியதில் 2 இளம்பெண்கள் பலி

496

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே இன்று காலை மாநகர பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற லட்சுமி, ஷாலினி ஆகிய 2 இளம்பெண்கள் பஸ்சில் சிக்கினர். இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த விபத்தில் இன்னொரு பெண் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தபோதுதான் பஸ் மோதியுள்ளது.

இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பலியான 2 பெண்கள் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ் டிரைவர் சிவாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.