பெருந்தொற்றால் பலி.. குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட உடல்.. இறுதியில் டுவிஸ்ட்..

704

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 50 வயது நபர், சமீபத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு உயிரிழந்த நிலையில், அவரது உடல் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சோகத்தில் இருந்த குடும்பத்தினர், அந்த நபரின் உடலை பெற்றபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது, அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, 50 வயது நபரின் உடலே கிடையாது. வேறொரு சடலத்தை மாற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர், இந்த விஷயம் மருத்துவமனைக்கு நிர்வாகத்திற்கு தெரியவே, எங்கு தவறு நடந்தது என்பதை ஆராய்ந்துள்ளனர். அதன்படி, 50 வயது நபர் இறந்த நேரத்தில் இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இருவரின் பெயரும் ஒரே மாதிரியாக இருந்ததால், ஊழியர்கள் சடலத்தை மாற்றி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு, சடலங்கள் சரியாக அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.