“கடைசியாக ஜிலேபி தான் சாப்பிட்டார்..” கௌதம் கம்பீரை காணவில்லை..? பரபரப்பு ஏற்படுத்திய சம்பவம்..!

516

இந்திய கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான ஒருவர் கௌதம் கம்பீர். இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து, பாஜகவில் இணைந்தார்.

இதையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர், வெற்றி பெற்று எம்.பி-யும் ஆகிவிட்டார். இந்நிலையில் கௌதம் கம்பீர் காணாமல் போனதாக கூறி, டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில், ” நீங்கள் இவரை பார்த்தீர்களா? கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும்போது காணப்பட்டார். மாயமான இவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கேட்டுகொள்கிறோம்” என்று எழுதப்பட்டிருக்கிறது.

டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், மாசு கட்டுப்பாடு குறித்து விவாதிக்க சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கௌதம் கம்பீர் கொள்ளாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of