தோனியின் சுயநலம்.. CSK தோல்வி.. பிரபல கிரக்கெட் வீரர் குற்றச்சாட்டு..!

2749

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், 217 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

இதன்பிறகு, விளையாடிய சி.எஸ்.கே. வீரர்கள் சரியாக விளையாடவில்லை. டுயூப் பிளசிஸ் மட்டும், அணியின் வெற்றிக்காக கடைசி வரை விளையாடி வந்தார். 5-ஆம் நிலை வீரராக தோனி விளையாட வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், 7-ஆம் நிலை வீரராக தான் விளையாடினார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தான் சி.எஸ்.கே தோல்வி அடைந்தது என்றும் பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், கிரின்இன்ஃபோ இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.

அதில், சிஎஸ்கே அணி வெற்றி பெறுவதற்காக விளையாடாமல், நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்துவதற்காக தான் தோனி விளையாடினார் என்று தெரிவித்தார். மேலும், டுபிளெசிஸ் மட்டுமே வெற்றிக்காகப் போராடியதாகவும் அவர் கூறினார்.