ஐசிசியின் வித்தியாசமான அறிவிப்பு! காட்டமாக டுவீட் போட்ட கவுதம் கம்பீர்!

980

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று லண்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் இரண்டு அணிகளும் ஒரே ரண்கள்(241) எடுத்து போட்டியை சமன் செய்தன.

இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதிலும் போட்டி சமனில் முடிந்ததால், அதிக பவுண்டரிகளை அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐசிசியின் இந்த அறிவிப்புக்கு பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது பின்வருமாறு:-

“இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள்? என்பது புரியவில்லை. ஐசிசியின் இந்த விதி அபத்தமான விதி.

போட்டி டையில் முடிந்திருப்பதால், கடைசி வரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

என்னைப் பொருத்தவரை இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள்தான்”

என்று காம்பீர் கூறியுள்ளார்.