ஊழியர்களுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்..!

198

தமிழக உள்ளாட்சி தேர்தலில், கோவை தீத்திப்பாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர், புல்லட் கந்தசாமி.

பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக தனது பகுதியை மாற்றுவேன் என தேர்தல் வாக்குறுதி அளித்த இவர், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, தீத்திப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடையில் நேரடியாக இறங்கி, தூய்மை பணியில் ஈடுபட்டார்.

ஊழியர்களுடன் ஊராட்சி மன்ற தலைவர் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டது, ஊர்மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of